Wednesday, September 7, 2016

அத்தியாயம் 12 - பக்தி யோகம்

பரமாத்மாவின் வெகு உயர்ந்த நிலையை உணர்ந்து  அவரை அடைவதற்கு சிறந்த வழி என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினான்.  அவருக்கு மிகவும் பிடித்தமானவர்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான்.   'என்னை எவர் எவரெல்லாம் பூஜித்து வருகின்றனரோ, என் மீது தளராத நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தி வருகின்றனரோ, அவர்களே மிகவும் முழுமை பெற்ற மனிதர்களாவார்கள்.   மற்றவர்களுள், எவரெல்லாம், ஐம்புலன்களை அடக்கி பிறருக்கு நன்மைகளையே செய்து வருபவர்கள் எல்லோரும் கூட என்னை எளிதாக வந்தடைவார்கள்' என்றார் பகவான் கிருஷ்ணர்.   தன்னை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன என்றும் அவர் மீது ஒரே நிலையாக பக்தி கொண்டு, அவருடனேயே மனத்தில் இருந்து விடுவதும் ஒரு வழி.   அதுவே சாத்தியப் படவில்லை என்றால், ஒரு பக்தி மார்க்கமான சேவை செய்து வாழலாம்.   தான் செய்யும் செயல்பாடுகளின் பலன்களை அவரிடம் விட்டு விடலாம்.  அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், அவர் மீது இருக்கும் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

     "நமது வாழ்க்கை:  நமது நாடான இந்தியாவில், குறைந்த பட்சம், கடவுளை எத்தனையோ உருவங்களில் தொழுது வருகிறோம். கல்லிலிருந்து மிருகங்கள் வரை, அவற்றிலிருந்து மேலும் பெரிய பெரிய மனித உருவங்கள் என்று வணங்கி வருகிறோம். இந்த வழிகள் எல்லாம் கடவுளை ஒவ்வொரு உருவத்திலும் காண முடியும் என்பதை நம்புவதற்காகவே செய்யப்படுகிறது.  ஒரு சில பழக்க வழக்கங்கள் ஜனங்களை பக்தி வழியில் மனத்தைச் செலுத்துவதற்காகவே உபயோகப்படுத்தப் படுகின்றன.   ஒரு மாத காலத்திற்கு ஒரு விழா நடத்துதல், ஒரு மாத காலத்திற்கு பிரார்த்தனைகள் என்று செய்வது நம் பழக்கம்.  அடிப்படையாக இந்த முறைகள் மூலம் மக்களின் மனத்தை இடைவிடாது மாற்ற முனைவதே அவற்றின் நோக்கம்.   . அத்துடன் கடவுளின் உருவங்கள் பெரும்பாலும், மகன், தாய், தந்தை போன்றவர்களின் குடும்ப அமைப்பாகவே இருக்கும்.   இவை எல்லாம் ஒரு குடும்பத்தின் கட்டுக் கோப்பான ஒரு அமைப்பையே கடவுள்களிடம் காண்பித்து, அவர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தின் மேலான அமைப்பையே கொண்டுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதே.  ஆஸ்ரமம் அல்லது மடம் ஒன்றிற்குச் சென்றால், அங்கு வேதங்கள் கற்பிக்கப்படுவதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும் பார்க்கிறோம்.  ஹிமாலய பிரதேசங்களில், யோகிக்கள், வாழ்க்கையில் எந்த பற்றையும் துறந்தவர்கள், வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவர்கள், பெரும்பாலும் தியானத்திலேயே வாழ்பவர்கள் போன்றவர்களைப் பார்த்து அறிகிறோம்.  நம்மைப் போன்றவர்கள் கடவுளைப் பற்றி கேட்டு அறிவதில் பெருமை அடைகிறோம்.   அவர் என்ன உருவத்தவர்அவர் ஏன் அப்படி இருக்கிறார், என்று மேலும் சில வாதங்களைச் சொல்லி அறிய முற்படுகிறோம்.   அந்த துறையில் நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்ளவே முனைகிறோம். (அதைப் போல மத விஷயங்கள் பேசப்படும் கூட்டங்களுக்கும் சென்று பிரார்த்தனைகள் செய்து நமது அறிவைப் பெருக்கிக் கொள்ள முனைகிறோம்.)   ஒரு சிலர் பிறருக்கு சேவை ச்செய்வதில் நம்பிக்கை கொண்டு செய்கிறார்கள்.   கடவுளுக்கு சேவை செய்வதிலும் நற்பணிகளைச் செய்வதிலும் அக்கறை கொள்கிறார்கள்.  எல்லாமே கடவுளை அடையும் வழிகள்தாம்.  அதாவது அந்த பரமாத்மாவை அடையும் வழிகளே.  (ஜிலீவீs sமீஸீtமீஸீநீமீ வீs ஸீஷீt நீறீமீணீக்ஷீ).

     எத்தனை எத்தனையோ விளம்பர பலகைகளைப் பார்க்கிறோம்.   தர்மத்திற்காகக் கொடுக்கப்படும் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கிறோம்.  தர்ம கைங்கர்யங்கள் செய்யும் ட்ரஸ்டிகளின் பெயர்களை ஆங்காங்கே கவனிக்கிறோம். கோவில்கள் ஆங்காங்கே ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சமூகத்திற்கும் என்று கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.  அதாவது கடவுள் அந்தந்த தெருவினருக்கும் சமூகத்திற்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.   அது மட்டுமல்ல, பூஜை புனஸ்காரங்கள் செய்து - கீதையில் சொல்லப்பட்ட கொள்கைகள் பிரகாரம் பூஜைகள் செய்து - மதக் கூட்டங்கள் நடத்தி, மக்களோடு தொடர்புகள் பல ஏற்படுத்திக் கொண்டு தம் இடங்களில் எல்லாம் இவ்வகை கூட்டங்களை நடத்துவதில் பெருமை கொண்டு வாழ்கிறார்கள்.  இவற்றை எல்லாம் செய்வதினால், ஏற்கனவே நாம் எல்லோரும் அவரை அடையும் வழிகளைத் தவற விட்டு விட்டோம்.  அப்படி இழந்ததினால் அவரைப் பற்றிய நினைவுகள் வருவது கடினமாகிறது. (இப்படி எல்லாம் செய்வதினால் அதைத் தான் நாம் நிரூபித்துக் கொண்டு வருகிறோம்.)"

     கிருஷ்ணா மேலும் அர்ஜுனனுக்குச் சொன்னார்: " எவரெல்லாம் வெறுப்பை உமிழிந்து விட்டு, பிறருடன் நட்புரிமை கொண்டு வாழ்கின்றனரோசுயச் செருக்கு (மீரீஷீ) இல்லாமல் வாழ்கின்றனரோ, எப்பொழுதும் ஒரு மனத் திருப்தியுடனும் சுய அடக்கத்துடனும், எவருடைய புத்தி என்மீதே எப்பொழுதும் படிந்து நிற்கிறதோ - இவ்வகைப் பட்டவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்களாக ஆகி விடுகிறார்கள்.  எவரெல்லாம் மகிழ்ச்சியோடு திளைக்காமலும் சரி, சோகப்படாமலும் சரி இருக்கிறார்களோ,எவருக்கெல்லாம் புண்ணிய பொருட்களும் சரி, புண்ணியமில்லாதவைகளும் சரி இரண்டிற்கும் அப்பால் பட்டு நிற்கிறார்களோ, மரியாதையோ அல்லது அவமரியாதையோ எதுவும் அவர்களை பாதிக்கவில்லையோ, புகழோ அல்லது புகழில்லாமையோ, எவருடைய மனமெல்லாம் அறிவிலேயே திளைத்திருக்கிறதோ மற்றும் எவரெல்லாம் பக்தி மார்க்கத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி வருகிறார்களோ - இத்தகைய மனிதர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆகிறார்கள்.  எவரெல்லாம் பக்தி மார்க்கத்தை பின்பற்றுகிறார்களோ நம்பிக்கையிலேயே ஊன்றி வாழ்கிறார்களோ, மற்றும் என்னை அடைவதையே வாழ்க்கையின் முக்கிய குறிக்கொள் என்று வாழ்கிறார்களோ - அவர்கள் எல்லோரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். 

     "நமது வாழ்க்கை:  நமது நண்பர்களுக்கும் சொந்தக் காரர்களுக்கும் வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றியோ, பதவி உயர்வுகள் , கல்யாணங்கள், சொத்துக்கள் குவிவது பற்றி சிந்திக்காமல் இருக்க முடியுமா?... நிச்சயம் நம்மால் முடியும்...  முதன் முதலில் நமக்கு நாமே மரியாதை செய்து பழகிக் கொள்ள வேண்டும்.  இரண்டாவது கடவுளின் பரமாதம் சொரூபத்தை விட வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர வேண்டும்.  பிற எதுவும் மதிப்பற்ற நிலையைக் கொண்டது.   ...   ஆகவே, முதலில் என்ன சொன்னோம்? நம்மை நாமே மரியாதைக்கு உரியவராக நடத்திக் கொள்ள வேண்டும்.    ... அதற்குக் காரணம், நமக்குள்ளேயேதான் கடவுள் இருந்து கொண்டிருக்கிறார்.  அதனாலேயே நீங்கள் முதலில் உங்களையேதான் மரியாதை செய்து கொள்ளுதல் வேண்டும்.

     சுயச் செருக்கு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் முக்கியமான உணர்வு.  ஒரு எல்லைக்கு மேல் அது இருந்தால், ஒரு மிருகம் உங்களைக் காயப்படுத்துவது போல உங்களை அது காயப்படுத்தி விடும்.     நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு எப்பொழுதும் எதையும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கிறது.  நம்மில் ஒருவரே முக்கியமானவர், பிறரை விடப் பெரியவர் என்ற உணர்வோடு அது உலவச் செய்கிறது.  ஒரு குறிப்பிட்ட சமூகமே ஒன்றைவிட மற்றொன்று பெரியது என்று நினைக்கத் தோன்றுகிறது.  நாம் அவர்களை விட பெரியவர்கள் என்றோ தாழ்ந்தவர் என்றோ நினைக்க வைக்கிறது.  ஒரு சிலர் பெரும் பிரபலஸ்தர்கள் செல்லும் பாதையிலேயே செல்ல நினைக்கிறார்கள்.  அப்படி அனுமதி மறுக்கப்பட்டால், அவர்களுடைய சுயச் செருக்கு தூண்டப்படுகிறது.   எந்த ஒரு உரையாடலிலும் அவர்களுடைய கருத்தே, அபிப்பிராயமே அறுதியான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  அடிப்படையாக ஒருவர் சுயப் பிரக்ஞை உடையவராக இல்லாவிட்டால் மற்றும் பிறரால் பெரும்பாலும் உதாசீனம் செய்யப்படுபவராக இருந்து விட்டால், இவ்வகை சூழல்களைச் சந்திப்பார்கள்.  தவறான வழியில் உபயோகப்படுத்தப்படும் சுயச் செருக்கு உணர்வு சம்பந்தப் பட்ட வகையில் ஒரு சமநிலையற்ற நிலையை அவரிடம் தோற்றுவிக்கிறது.   அந்தப் பொய்மையான ஒரு நிலை, நமது பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் அர்த்தமற்றவைகளாக ஆக்கி விடுகின்றன.  இறுதியில் இந்த நிலைமை நிலைநிறுத்தபிறர் நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.  அல்லது பிறர் ஏதோ உங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் (உண்மையைவிட அது பன்மடங்கு மேலாக இருக்கலாம்.)  ... இந்த பொய்மை கலந்த சுயச் செருக்கை தவிர்க்க, உங்களை நீங்களே பரிசோதித்துக் கொண்டு பாருங்கள்.  பிறரிடம் குடிகொண்டிருக்கும் கடவுளைப் பாருங்கள்.  கடவுளின் செயல்பாடுகளில் நம்பிக்கை வையுங்கள்.   உங்களை எந்தவித புகழுக்கும் சரி, மரியாதை வார்த்தைகளோடும்சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள்.
.       அப்படி ஒருவேளை அவற்றோடு உங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டு உங்களை நீங்கள் பார்க்க ஆரம்பித்தால் போதும், உடனே உஙக்ளுடைய சுயச் செருக்கைத் தூண்டி விட்டவர்கள் ஆவீர்கள்.  பெரும்பாலான சமயங்களில், எங்கெல்லாம் வன்முறையும் உறவு துண்டிக்கப்படுவதும் நடக்கிறதோ இந்த பொய்மையான சுயச் செருக்கே பிரதான காரண்மாக இருப்பதைக் காணலாம்.  இந்த குணத்தை விட்டு விட்டால், உங்கள் வாழ்க்கை மிக அருமையாக இருக்கும்.  (உங்களோடு உறவாடும் நண்பர்களோ, உறவினரோ போன்றவர்களும் சுகமான மனப்பாங்குடன் நடந்து கொள்வார்கள்.)   அதைச் சொன்னதால், ஒரு முட்டாளின் வாழ்க்கையை வாழச் சொல்லவில்லை... அல்லது பிறர் எவரும் உங்களை ஏளனமாக நடத்துவதை அனுமதிக்கச் சொல்லவில்லை.  ...  எதுவெல்லாம் சரி என்று படுகிறதோ அதை உறுதியாக்ச் சொல்லி நிலைத்து நிற்கச் செய்து வாழுங்கள்.  அதுவே உங்களுடைய கடமை.   ஆனால் எப்பொழுதும் அந்த சுயச் செருக்கு உணர்வோடு வாழ வேண்டாம்."

No comments:

Post a Comment