Friday, August 9, 2013

முன்னுரை! (பகவத் கீதா பார் டம்மிஸ் நூலின் தமிழாக்கம்)




பகவத் கீதை - சிலருக்கு இது ஒரு வாழ்க்கை அறிவியல், சிலருக்கு இது ஒரு கர்ப்பனை காவியம், சிலருக்கு இது ஒரு இந்து மத தலை நூல், இன்னும் எத்தனையோ பார்வைகள்! "ம்" ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான மற்றும் விருப்பமான முறையில் பகவத் கீதையை பார்க்கின்றனர். இங்கு எத்தனையோ புத்தகங்கள் பகவத் கீதையை பற்றி ஞானிகளாளும், பண்டிதர்களாளும் எழுதப்பட்டிகின்றன, இங்கே உங்கள் முன்னால் இன்னும் ஒரு புத்தகம், ஒரு சாதரண மனிதனால் எழுதப்பட்டது! 500 கோடிக்கும் அதிகாமன மக்கள் வாழும் இந்த உலகில், தான் யார் என்று அடையாளம் தேடிக்கொன்றிருக்கின்ற சாதரண மனிதனான நான், அந்த கீதையை படிக்கும்பொழுது புரிந்துகொண்ட உண்மைகளையும், அதன் பொருளையும் உங்கள் முன் இந்த புத்தகமாக தருகின்றேன்.
ஏன் நான்? இது தான் என் முதல் கேள்வி இந்த பயணத்தில், "இது என் கடமை" என் மனம் சொன்னது, இதோ உங்கள் முன்னால் இந்த புத்தகத்துடன் நிற்க்கிறேன்! இந்த பரந்த உலகின் ஒரு மூலையில் பிறந்து வளர்ந்த எனக்கு, என் பெற்றோரும் என் ஆசிரியர்களும், கீதையை ஒரு உயரிய புனித நூல் என அறிமுகம் செய்தனர். பிறப்பின் வழியிலோ அல்லது வளர்ப்பின் வழியிலோ நான் அத்தனை இந்து மதத்தின் அடிப்படையை அறிந்தவன் அல்ல, ஆனாலும் என் பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு என்று நம்புகின்றவன் நான், என்னை போலவே உங்களில் பலரும் நம்பலாம் இங்கே!


வாழ்வின் சூழ்நிலைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள், என்னை ஒரு உயரிய சக்தி இந்த உலகை ஆள்கிறது அதனை தவிர வேறொன்றும் இல்லை என நம்பவைத்தது, அந்த நம்பிக்கையுடன் வாழ்வை தினமும் வாழ்கிறேன்! கீதையை நான் படித்தது, அந்த உயரியகடவுள் எனக்ககா, உங்களுக்காக மற்றும் மனித இனத்திற்கு சொன்னது என்ன என்று புரிந்துகொள்ளவே! கீதையை என் சுயமனதுடன் படித்து அதன் சொற்களின், வரிகளின் பொருளரிந்து, என்னை போன்ற சாதரண, நடுத்தர மக்களுடன் பகிர்ந்துகொள்வதை என்னுடைய உரிமையாகவும் (நானும் அந்த உயரிய கடவுளின் அங்கமாக இருப்பதனால்) மற்றும் கடமையாகவும் கருதுகிறேன்.

கீதை பூஜா அறையில் அல்லது உங்கள் நூலகத்தில் சேமித்து வைக்க அல்ல. நமக்கு புரிந்து, நமது இயல்பான வாழ்க்கையை வாழ, நமது கடமையை செய்ய, கடவுள் நமக்காக கீதையை கூறினார்! (துறவிகள் விளக்கங்கள் கொடுக்க முடியும், ஆனால் அவர்கள் இந்த உலகில் அடைய ஒன்றும் இல்லை, அவர்களின் விளக்கங்களும் நம் அறிவுக்கு மேலாகவும் அமைந்துவிடுகின்றது) கடவுள் கீதையை தனது கடமையை செய்ய, ஒரு போர்வீரனுக்கு கூறினார் (ஒரு துறவிக்கு அல்ல)!


வாருங்கள் நமது அனுபவத்தை ஆரம்பிக்கலாம்!

2 comments:

  1. Hi Sir,
    Please publish this book in kindle.I will purchase.
    I am reading your english version in kindle.
    Thanks for sharing and writing this book.It is good to know from another perspective.
    Thanks,
    Ramnath

    ReplyDelete
    Replies
    1. Kindle has problem in publishing in tamil. Please check in pothi.com, its published there. Also in smashwords.

      Delete