Saturday, August 10, 2013

அத்தியாயம் 1 - அர்ஜூனனின் வருத்த நிலை

சுருக்கமான பின்னணி:

பகவத் கீதையை துவங்குவதற்கு முன், எதற்காக மற்றும் எங்கிருந்து வருகிறது என புரிந்து கொள்வோம். பகவத் கீதை, காவியமான மகாபாரதத்தில் ஒரு பகுதியாக உள்ளது. இதில் கடவுள் உச்ச ஆளுமையுடைய "கிருஷ்ணன்" என்ற வடிவம் எடுத்து உலகில் பிறந்தார். இந்த அவதாரத்தில், கடவுள் மனித வடிவத்தில் கடவுள் தன்மையுடன் அவதரித்தார். மகாபாரதம், ஒரு அரச குடும்பம் பற்றிய  கதை, இதில் அரசாட்சியில் தங்கள் உரிமையை நிலை நாட்ட இரு சகோதர குடும்பங்கள் போராடுகின்றனர் , சிலர் நேர்மையுடனும் மற்றும் சிலர் பேராசையுடனும். இந்த காவியத்தில் நாம் இன்றளவும் சாதாரண வாழ்வில் நம்முடன் பார்த்து கொண்டிருக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் குணதிசயங்களை காணலாம். கௌரவர்கள் (தவறா எண்ணத்துடன்) மற்றும் பாண்டவர்கள் (உரிமையுள்ள எண்ணத்துடன்) தங்கள் உரிமையை நிலை நாட்ட போர்களத்தில் எதிர் எதிரே நிற்கின்றனர்.  அவரவர் வேண்டியபடி, கௌரவர்கள் கிருஷ்ணனின் படை வீரர்கள் உடனும்,  பாண்டவர்கள் கிருஷ்ணனுடனும் போர்களத்தில் நிற்கின்றனர்.

பாத்திரங்கள்:

கிருஷ்ணா: அவர் கடவுளின் உச்ச ஆளுமை வடிவம். நாம் உச்ச சக்தி அல்லது உயர்கடவுள் என்று அழைக்க முடியும். அவர் பாண்டவர்களின் மற்றும் கௌரவர்களின் தாய்மாமன். அவர்  பெற அல்லது போரில் இழக்க ஒன்றும் இல்லை (ஏன் என பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்)
அர்ஜுனன்: அவர் தலைசிறந்த வில்வித்தை வீரன் மற்றும் பாண்டவர்களில் ஒருவன். அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் இடையேயான உறவு, மிகவும் நெருக்கமாகன ஒன்று. அது தூய காதல், பாசம் மற்றும் மரியாதை  வடிவில் உள்ளது.
 "நமது வாழ்க்கை: நாம் எப்போதும் அன்பை, ஒரு வடிவமோ அல்லது வண்ணமோ அல்லது வகைப்படுத்தியோ பார்க்காமல் இருக்கின்றோமா? .... இல்லை, எப்போதும் நாம் ஒரு நண்பர், அக்கா, அம்மா, மாமா, மனைவி, மகள் போன்ற சில வடிவத்தில்  கொண்டுவந்து, ஒப்பிட்டு மற்றும் வகைப்படுத்தவும் செய்கிறோம், நம்மால் வடிவம் இல்லாமல் ஒரு அன்பை ஏற்க முடியாது ... சாதாரண மனிதன்  தன் வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்க்காமல் மூளையில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய இயலுவதில்லை.
அர்ஜுனன் வேறு யாரோ அல்ல, நினைவில் வையுங்கள், "அவர் நீங்கள் தான்", மற்றும் அவர் கிருஷ்ணன் முன்னால் நம் சார்பாக நின்றார். இதை வாசிக்கும் ஒவ்வொரு மனிதனுடனும் கடவுள் பேசியிருக்கிறார், இங்கே நீங்கள் தான் அர்ஜுனன். கீதை மனித இனத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது! கூடுதலாக, பிற உயிரினங்களுக்காக (மனிதர்கள் அல்லாமல், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், முதலியன) கடவுள் எந்த வடிவில் வந்து என்ன சொன்னார் என்பது நாம் அறிந்து இல்லாத ஒன்று. இதேபோல், கீதையில் இலக்கணம் எப்போதும் ஆண்பால் உடனே வரும்; எனினும், பெண்கள்  படிக்கும் போது  தகுந்த இலக்கணத்தை உபயோகிக்க வேண்டும்.
சஞ்சயன்: அவர் விதிவிலக்கான சக்தி கொண்டவர் மற்றும் போர்க்களத்தில் நடக்கும் அனைத்தையும் தன் ஞானத்தால் பார்க்க முடிந்த நபர். அவர் விளக்கி அரசனிடம் கூறியதால் தான் இன்று கீதையில் என்ன இருக்கிறது அல்லது கடவுள் அர்ஜூனனுக்கு  என்ன கூறியுள்ளார்ன அறியமுடிகிறது, நாம் "தொலை காட்சி/ஒலி சேவை"  என்று அவரை அழைக்க முடியும்.
திரிதராஷ்டிரன்: அவர் கௌரவர்களின் தந்தை மற்றும் அப்போதைய அரசர். அவர் கண் பார்வை அற்றவர், எனவே அவர் போர்க்களத்தில் இல்லை. ஆனால் சஞ்சயர் மூலம், நடப்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

திறப்பு:

சஞ்சயர் போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்று திரிதராஷ்டிரானிடம் விளக்குகின்றார். போர்க்களத்தில் இலட்சகணக்கான வீரர்கள்  இருபுறமும்  வரிசையில் எதிர் எதிரே அணிவகுத்து நிற்கின்றனர். இரண்டு பக்கங்களிலும்  மாவீரர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவரையொருவர் வெற்றிபெற தங்கள் தேர்களுடன் மற்றும் சக்தி மிகு ஆயுதங்களுடன் அங்கே நிற்கின்றனர். "நமது வாழ்க்கை: நான் ஆங்கில படங்கள் நிறைய பார்ப்பதுண்டு, அதனால் நான் இது போன்ற இராணுவ அளவு என்னவாக இருக்கும் என்று 'தி மம்மி, லார்டு ஆப் தி ரிங்க், அலெக்சாண்டர் மற்றும் பல ' படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்தி பார்க்கிறேன், ஆஹா ... அது அற்புதமான கற்பனை! ஆனால் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்  என்று ஞாபகம் கொள்ளவேண்டும். ஒவ்வொரு  வீரனுக்கும் குடும்பம் இருந்தது, ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு வரலாறு உண்டு. நான் மற்றும் நீங்கள், அந்த வீரர்களில் ஒருவராக வீடு மற்றும் மனைவி, மக்களை விட்டு, ஒரு சில நாட்களில் மீண்டும் வீடு போய் சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் அங்கே நின்றிருக்கலாம் . நாம் எப்போதும் கதாநாயகனாகவோ அல்லது ஏதிர்நாயகனாகவோ ஏன் நம்மை யோசிக்கவேண்டும், ஏன் ஒரு பக்க நடிகராக கூடாது?! "
கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரோட்டி. ஏன் கடவுள் ஒரு தேரோட்டியாக உள்ளார்? உண்மையில் அவர் மனித இனத்திற்க்கு வாழ்க்கையை கற்பிக்க போகிற போர்க்களத்தில், வாழ்க்கையின் தேரோட்டியாக நிற்கின்றார்!

பழகுநர்ககளுக்கான பாடம்:

அர்ஜுனர் போரில், அவருடன் மற்றும் அவருக்கு எதிராக  போரிட போர்களத்தில் யார் உள்ளனர் என்று பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணனிடம் கோரினார். இது சுயமாக ஒருமுறை தன்  மற்றும் எதிரியின் படைபலனை அறிந்துகொள்ளும் செயல். கிருஷ்ணர் களத்தின் மையத்திற்கு தேரை எடுத்து சென்று, அவரது இருபுறமும் அர்ஜுனனின் இராணுவம் மற்றும் அவரது எதிர்ப்பாளர்களை பார்க்க முடியும் என்று அர்ஜுனனிடம் கூறினார்.
"நமது வாழ்க்கை: நாம் இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா- ரஷ்யா அல்லது நாம் மற்றும் பணியிடத்தில் ஒவ்வாத ஒருவரையோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரையோ கற்பனை செய்து நாம் நல்லவர்கள் மற்றவர்கள் தான் நம் எதிரிகள் என்று கற்பனை செய்வதை விட்டு, ஒரு பக்கத்தில் என் தூய்மையான எண்ணங்கள், எதிர் முனையில் என் தூய்மையற்ற எண்ணங்கள், இன்று கடவுள் அவற்றுக்கு இடையே மனத்தேரினை நிறுத்தி, என்னை இருபுறமும் பார்க்க கேட்கின்றார் என்று கற்பனை செய்ய நமக்கு தைரியம் இல்லை. இன்று முழு மனதுடன் முயற்சி செய்வோம்!
நம் அனைவருக்குள்ளும் மூன்று நிலையில் செயல் புரியும் அமைப்பு உள்ளது, 1) புற செயல் அமைப்பு  - அது அவன் / அவள் வாழ்ந்த சூழல் அடிப்படையில் பழக்கமாக்கப்பட்டது ,  இது ஒரு சூழ்நிலையில் நல்ல அல்லது கெட்ட வழியில் உடனடி பதில்/செயல் தரக்கூடியது,  இது "உயிர் வாழும் வேட்கை " அமைப்பு 2) உள் செயல் அமைப்பு - "திட்டமிடல்" அமைப்பு, மனம் மற்றும் இதய அடிப்படையாக கொண்ட,  பகுப்பாய்வுப் பிறகு பிறந்த நல்ல மற்றும் மோசமான  நீண்ட நின்று விளைவு கொடுக்கும் எண்ணங்கள், இங்கு பிறக்கின்றன. (நாம் அனைவரும் நம் மனதில் & இதயத்தில் நம்முடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் உடலமைப்பின்படி "இதயத்தால் பேச / நினைக்க முடியாது" - ஆனால் அதை ஒரு " மூளையின் தூய்மையான எண்ணத்திற்கு மற்றும் காதல், பாசம், இரக்கம் போன்ற் உண்மையாக சிந்தனைகளை குறிப்பிட உபயோகிக்கின்றோம்" 3) மீத்துய்மையான ஆழ் மன செயல் அமைப்பு: நாம் மிக அரிதாக தொடர்பு கொள்ளும் ஆன்ம அமைப்பு. இது நன்மை, கொடுமைகளுக்கு அப்பாற்பட்டது, யாராலும் மாற்ற முடியாதது. நிலையான நடைமுறைகள் (எ. கா: யோகா / தியானம் / சுய உணர்தல்) மூலம் இதனை நாம் தொடர்பு கொள்ளலாம். இது எந்த நேரத்திலும் "நாம் சரியான வாழ்க்கையை வாழ்கிறோமா?!" என்று சொல்லக்கூடியது!
இப்போது, கற்பனைக்கு திரும்பி வருவோம். தற்போது நாம் நம்முடைய செயல் அமைப்புகள் மற்றும் அதில் உள்ள நல்ல மற்றும் கெட்ட எண்ணங்களை தூய்மையான ஆன்மாவின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். "
 அர்ஜுனனால் தன் இருபுறத்திலும் அவரது மாமா, முன்னோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகளை மட்டுமே பார்க்க முடிந்தது, அவன் மனம் உறவு, இணைப்பு மர்றும் மரியாதை ஆகிய உணர்வுகளால் குழம்பி இருந்தது, தனது உண்மையான எதிரிகள் யார் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் சொன்னதாவது, எனக்கு இந்த மூன்று உலகங்களை கொடுத்தாலும், நான் அதை அடைய அவர்களை   கொல்ல மாட்டேன் என்று கிருஷ்ணணிடம் கூறுகிறான். நான், அவரது சொந்த மக்களை கொன்றுவிட்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற பேராசைக்காரன் இல்லை, அதானால் வரும்  பாவம், என்னை மட்டும் அல்லாது என் சந்ததியையும் விடாது என்று கூறினான் .
ஒரு பொதுவான நபராக நாம் சொல்லலாம், அர்ஜுனன் மிகவும் நல்லவன் அவன் நிலத்திற்காக அவனது குடும்பத்தினரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. கூடுதலாக, அர்ஜுனன் சமாதானமாய் செல்லத் தானே முயல்கிறான் அதில் தவறு ஒன்றும் இல்லையே?
"நமது வாழ்க்கை: நம்மில் பெரும்பாலானோருக்கு, சமாதானம்/ அமைதி ஒரு முக்கியமான விஷயம் நம்மை பொறுத்தவரை, 'அமைதி' என்பது எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் வாழ்க்கை. இது உண்மையில் எந்த ஒரு புதிய நிலைக்கும் அல்லது முடிவெடுக்கும் நிலையிக்கும் செல்லாமல் அப்படியே வாழ்வது. உண்மையில் நாம் இந்த அமைதிக்காக பல முறை நம் சூழலில் நடப்பவைகளை மற்றும் நம் சுயத்துடன் நடக்கும் செயல்களை அறியாதது போல் இருக்கிறோம். நாம் சமூக பாகுபாடு, பாரபட்சம், குடும்ப அல்லது எந்த அளவில் நடக்கும் தவறுகளுக்கும் எதிராகவும் நமது குரலை உயர்த்த வேண்டாம் என்று வாழ்கிறோம். நாம் அமைதியாக வாழ செய்யும் இந்த சமாதான வழி உண்மையில் "அறியாமை" என்று அழைக்கப்படுகிறது. நாம் நம் வாழ்க்கையில் முடிவுகளை எடுக்க விரும்புவதில்லை, ஏனெனில் நாம் அதை செய்யாதிருப்பதின் மூலம் எதையும், நம் வாழ்க்கையில் எதையும் (இணைப்பு & உறவு) இழக்க விரும்புவதில்லை. இதே போன்று தான் அர்ஜுனனும் உணர்ந்திருந்தான்.
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சொன்னதாவது, இது போல் என் சொந்த மக்களை கொலை செய்து அத்தகைய பாவத்தை பெற்று, என் குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் பாதிக்கும்படி  செய்யாமல், எந்த கவசமும் இல்லாமல் போர்க்களம் சென்று கௌரவர்களின் கையால் மடிவதே சரி என்று கூறி அவன் தனது வில்லை கீழே போட்டு தேரிலே அமர்ந்து விட்டான்.
 அர்ஜுனன் எது நல்லது எது கெட்டது, எது தனக்கு பாவத்தை தரும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான், அவனுடைய அறிவு எந்த அளவோ அதனை பொறுத்து, அவன் நன்மை எது, தீமை எது என முடிவு செய்தான்.

"நமது வாழ்க்கை: மனிதன் ஒரு செயல்பாட்டின் முடிவை நல்ல மற்றும் மோசமானது என்று வகைப்படுத்துகிறான் என்றால், அவன் வாழும் சூழல், சமூகம், மற்றவரின் பார்வை, கோட்படுகள் இவற்றை கொண்டு முடிவு செய்கிறான். மனித கண் எப்படி ஒரு குறிப்பிட்ட அளவு தான் பார்க்க முடியுமோ, அதே போல் அவனது விதிகள் அவனது இடத்திற்கு நெருக்கமான விஷயங்களை அடிப்படையாக கொண்டு மட்டும் அமைந்துவிடுகிறது. நாம் நமது வெறுமையான கண்ணால் ஒரு நுண்ணுயிரியை பார்க்க முடியாது, அதனால் அங்கே ஒன்றும் இல்லை என்று அர்த்தம் இல்லை! நாம் திரைப்படம் பார்க்கும் போது உணர்ச்சியடைகிறோம், நமக்குத் தெரியும் அது உண்மையான நிகழ்வு அல்ல என்று இருப்பினும், மனிதன் அவன் உணர்வுகள், பிரமைகள் மற்றும் ஆசைகள் மூலம் இயக்கப்படுகிறான் பெரும்பாலான் நேரத்தில்! மனிதன் நினைக்கிறான், தானே சிறந்தவன் என்றும்,  அவன் சரி எது தவறு எது  என்று அறிந்தவன் என்று! உண்மையில் அவன் தான்  யார் என்றும் அவன் நோக்கம் என்ன என்று தெரியாமலே தன் வாழ்வையே முடிக்கிறான்! அர்ஜுனன் போல, நாமும் சரி/தவறு, நல்லது / கெட்டது என்ன என்று நமது அறிவுக்கு எட்டியவாறு,   நமது பகுதியில் / மதம் / சமூகம் / நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படியாக கொண்டு முடிவெடுக்கிறோம், அதே வேறு ஒரு பகுதியில் / மதம் / சமூகம் / நம்பிக்கையை பொறுத்து , இவற்றின் வரைமுரைகள் வித்தியாசப்படும்"

No comments:

Post a Comment