Saturday, August 24, 2013

அத்தியாயம் 8 - அழியாத பிரம்மாவின் யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்கினார், மரணத்தின் போது / உடலை உயிர் விட்டுபிரியும் தருவாயில், ஒரு நபர் தன் இலக்கு உயர் கடவுள் மட்டுமே என வழிபடுகின்றானோ அவனும்,எவன் ஒருவன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து உயர் கடவுளை வழிபடுகின்றானோ அவனும், வேதங்களை படித்து அவற்றில் உள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதலின் படி வாழும் ஒருவனும், ஆன்மீக சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, முழுமையாக தொடர்ந்து செய்யும் ஒருவனும், மற்றும் எவன் ஒருவன்  சூரியன், சந்திரன் மற்றும் எல்லா கடவுள்களாக, என்னை எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாவாக, பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாவாக, பெரியவனாய், சிறியவனாய், எல்லாவற்றின் கட்டுப்படுத்தியாக, மிக பழமையான மற்றும் உச்ச ஆளுமைடயை கடவுளாக புரிந்து வாழும் யோகியும், உட்பட அனைவரும் என்னையே அடைகின்றனர்.
கிருஷ்ணன் கண்களை மூடி, மைய புள்ளியை தன் கண்களின் இடையே நிறுத்தி, "ஓம்" என்ற மந்திர உச்சரிப்புடன், கடவுளை பற்றிய சிந்தனையில் மனதை கட்டுபடுத்தி எப்படி தியான யோகா பயிற்சியில் ஈடுபடுவதென விளக்கினார். இதேபோல் அவர், பிரம்மா மற்றும் மனிதன் நாட்கணக்கில் உள்ள வித்தியாசம், மற்றும் காலம் மற்றும் நாள் / இரவு, ஆகியவற்றின் அடிப்படையில் எப்போது ஒருவன் பிறப்பற்ற நிலையை அடைய முடியும் என்றும் விளக்கினார். இவற்றிற்கு அப்பாற்பட்டு எவன் ஒருவன் உறுதியாக உயர் கடவுளை மட்டும் மரணத்தின் தருவாயில் வழிபடுகிறானோ அவன் நிச்சயம் என்னை அடைகிறான் என கிருஷ்ணன் விளக்கினார்.
"நமது வாழ்க்கை: நாம் ஒரு மிகவும் பிரபலமான கேள்வியை இன்று நம் முன் எழுப்புவோம், உலகம் ஒரு விண்மீனால் இன்று அழிக்கப்பட போகிறது, அதை நடு வானில் தடுத்தி நிறுத்தி அழிக்க அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனாவிற்கு வாய்ப்பு இல்லை எனவே அதிகாரபூர்வமாக இவ்வுலகம் இன்னும் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்றால், நீங்கள் இப்போது என்ன செய்ய போகிறீர்கள் ...? நம்மில் பலர் நம் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய விரும்புவார்கள். சிலர் மதுபானகடையில், சிலர் குடும்பத்துடனும், சாலையில் கூவிதிரிவோர் சிலர், மூலையில் அழுபவர் சிலர், தொலைபேசியில் சிலர், காதலில் சிலர், சிலர் புனித புத்தகம் படித்தோ மற்றும் தேவாலயத்தில் / கோவிலில் / மசூதியில் வழிபட்டோ (அடிப்படையில், உலகம் இன்று முடிவுக்கு வர கூடாது என்று பிரார்த்தனை செய்து, கடவுள் ஏதாவது மாயை செய்து அவர்களை காப்பாற்றி இன்னும் சில ஆண்டுகள் வாழ செய்ய) இருக்கலாம். பெரும்பாலானோர் இறுதி நேரத்திலும் தங்களின் உணர்ச்சியின் தேவையை பூர்த்தி செய்வதிலும், எந்த ஒரு செயல் தன்னை மறக்க செய்து இன்பத்தை தருகிறதோ அல்லது பயத்தை நீக்குகிறதோ அதிலும், தன் நிறைவேறா ஆசைகளை பூர்த்தி செய்வதிலும் ஈடுபடக்கூடும், இதில் கடவுளை மட்டும் குறிக்கோளாக வேறு எதையும் மனதில் நினைக்காமல் தன் கடைசி கணங்களை கழிப்பவர் மிகவும் குறைவாகவே இருப்பர்!

யார் ஒருவர், புனித நூல்களை படித்தோ அல்லது புனித இடத்தில் வேண்டிக்கொண்டு கடவுளை தேடுகின்றனரோ, அவர்கள் இன்னமும் வெளியே காகிதத்தில் (சொற்களில்) அல்லது ஒரு இடத்தில்  கடவுளை தேடி வருகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை. எனினும், நீங்கள் கடவுளை வெளியே தேட ஆரம்பித்தால், உங்கள் பாதை மிக பெரியது மற்றும் அதற்கு இறுதி என்பது கிடையாது. நம்மில் பலர் கடவுளை ஒரு வடிவத்தில் அல்லது ஒரு செயலில் அல்லது இயற்கையில், அல்லது ஒரு இடத்தில் பார்க்க வேண்டும் என நினைக்கிறோம் ... கடவுள் நமக்கு நம் கண் முன்னே வர வேண்டும் ... அவர் ஏன் வரவேண்டும் உங்கள் முன்னே? .... கடவுள் உங்களின் உள்ளே உள்ளார், அவரே ஆன்மாக்களின் அடிப்படை ஆன்மா மற்றும் இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அவரின் ஒரு பகுதி என்றால், உங்கள் ஆன்மாவில் தான் கடவுள் வாழ்கிறார் ... வெளியே அவரை தேட வேண்டாம் ... நீங்கள் எப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியாது!  உங்கள் வாழ்வின் எந்த ஒரு கணமாகவும் இருக்கலாம் அவர் உங்களை விட்டு பிரிவதில்லை! நீங்கள் யாருக்காவது உதவலாம், இறைச்சி உண்ணாலாம், தேநீர் அருந்தலாம், காயமடைந்திருக்கலாம், அல்லது வேலை செய்யலாம், மற்றும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எந்த ஒரு கணத்திலும், ல்லா இடங்களிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்! நாம் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழ்கிறார்  என்று நினைக்கிறோம், இது அறியாமை தவிர வேறு எதுவும் இல்லை.அவர் உங்களை தனியாகவிடுவதில்லை, அது வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும், இழப்பாகட்டும் அல்லது வேறு ஏதுமாகட்டும், அவர் உங்களுடன் இருந்து உங்கள் வலியிலும் மற்றும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார். நீங்கள் உறுதியுடன் இருக்கலாம், நீங்கள் அவரின் ஒரு பகுதியென, நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லையென, ஆனால் நீங்கள் கடவுள் இல்லை! எப்படியாயினும் இதை எல்லோரும் ஒரே அளவில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான், பல மதங்கள் மற்றும் வழிமுறைகளை (பிரார்த்தனை, தியானம், ன்மிக சேவை போன்றவற்றை) அவர் படைத்துள்ளார்.

அத்தியாயம் 7 - ஞானத்தோடு புரிந்துணர்வு யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் அகம்பாவத்தை நான் உருவாக்கினேன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இங்குள்ள உயிர்களை  உருவாக்கினேன். இவை அனைத்தும் மணிகள் நூலின் மீது சரமாக தொகுக்கப்பட்டது போல என் மீது அமைந்துள்ளது. மேலும் அவர் கூறினார், நீரின் சுவையும், நிலவின் வெளிச்சமும், வேதங்களில் உள்ள "ஓம்" என்ற ஓசையும், மண்ணின் வாசமும், ஒளிக்கதிர்களின் ஒளியும், அறிவாளிகளின் அறிவும் மற்றும் அனைத்து வாழ்வும் என்னுள் அமைந்ததுவே.தூய்மை, செயல் புரிதல் மற்றும் செயலாற்றமை போன்ற பல பண்புகளும் உயர்கடவுளான என்னிடம் இருந்து வருகிறது, ஆனால் நான் அவற்றினுள் இல்லை, இவை அனைத்தும் தெய்வீக மாயைகள், இவற்றை கடப்பது மிகவும் கடினம். துயரத்தில் இருப்பவன், அறிவை தேடுபவன், செல்வத்தை தேடுபவன் மற்றும் ஞானிகள் இவர்கள் அனைவருமே என்னை வழிபடுகின்றனர், இவர்களில் என்னை மட்டும் குறிக்கோளாக வாழும் ஞானியே எனக்கு விருப்பமானவன். நான் வடிவம் இல்லாமலும் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் இருக்கிறேன், மனிதர்கள எந்த வடிவத்தை பின்பற்றி என்ன வேண்டுகின்றனரோ அதை அவர்கள் அடைகின்றனர், இதில் எவன் ஒருவன் என்னுடைய  உயர் வடிவத்தினை வழிபடுகின்றானோ அவன் என்னை அடைகின்றான், அவன் அழிவற்ற நிலைக்கு செல்கிறான். நான் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தினை அறிந்தவனாயிருக்கிறேன், ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை. ஞானமுற்றோன் இறக்கும் தருவாயில் கூட என்னை வணங்கி என்னிடம் வருகின்றான், அவர்கள் மட்டும் அன்றி பாவம் செய்தவர்கள் கூட இறக்கும் போது என்னிடத்தில் சரணடைவார்கள் என்றால் என்னிடம் வந்தடைகின்றனர்.

"நமது வாழ்க்கை: இந்த பிரபஞ்சம் ஒரு அற்புதமான இடம், இதில் பல அற்புதமான படைப்புகள் உள்ளன! ஆனாலும் நாம் சற்று அருகே சென்று பார்த்தால், இவை அனைத்திலும் சில பொது அமைப்புகளை காணலாம். ஒரு உலோகத்தின் அணு, ஒரு உடலின் ஒரு செல் போன்ற மிகச்சிறிய வடிவமாயினும்,  மற்றும் மிகப்பெரிய இந்த பிரபஞ்சமே ஆயினும், இவை அனைத்தும் தன் மையத்தில் ஒரு கருவையும், அவற்றை சுற்றி சுதந்திரமாக சுற்றி திரியும் துகள்களும், மற்றும் சுற்றுவழிப்பாதையில் சுற்றி திரியும் துகள்களும் (எலக்ட்ரான்,கிரகங்கள்,போன்றவை) கொண்டு அமைந்துள்ளது, இங்கு அனைத்து பொருள் கூறுகள் மற்றும் உயிரினங்களின் அடிப்படையும் பொதுவான வடிவத்திலேயே உள்ளது. எனவே, நாம் பகவத் கீதையில் கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என படிக்கும் போது, ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் நியூட்டன் விதிகளின் படி (ஆம். .. பள்ளியில் நமக்கு மதிபெண்கள் பெற்று தந்த அறிவியல் பாடம்!) இந்த பிரபஞ்சத்தில் ஆற்றலை உருவாக்கவோ முடியாது மற்றும் அழிக்கவோ முடியாது, ஆனால் அது ஒரு வடிவத்தில் இருந்து மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். இது ஒரு அறிவியல் கோட்பாடு எனும் போது, நாம் கேள்வி கேட்பதில்லை, தே ஒரு புனித புத்தகத்தில் வரும் போது நாம் அவற்றை நம்புவதில்லை ... கடவுள் பிறப்பு மற்றும் அழிவற்றவர் மற்றும் அதே போல் ஆன்மா பிறப்பதுமில்லை மற்றும் இறப்பதுமில்லை, ஆனால் அவை வெவ்வேறு உடல்களின் வடிவங்களை அடையமுடியும்... அறிவியல் என்பது அவரது படைப்புகளை படிக்க பயன்படுத்தப்படும் ஒரு மொழி, ஆனால் அது கடவுளோ அல்லது அவரை அடையும் பாதையோ ஆகாது, அவரை அடையும் ஒரே வழி "நம்பிக்கை", அது மட்டுமே நம்மை உயர் கடவுளிடத்தில் இட்டு செல்லும்.

Monday, August 19, 2013

அத்தியாயம் 6 - சுய கட்டுப்பாட்டு யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், செயலின் மீதோ, முடிவின் மீதோ பற்று இல்லாமல் தன் கடமையை செய்யும் ஒரு யோகி, செயலாற்ற இருப்பவனை விட மேலானவன். தன் எண்ணங்களை வென்ற ஒருவனே உயர் நிலைக்கு செல்கிறான். மனிதர்கள், தங்களை தாங்களே தாழ்த்திகொள்ளகூடாது,தன்னை வென்ற ஒருவன் தன் சுயத்திற்கு நண்பனாகிறான், அது இயலாதவனோ தனக்கு தானே எதிரி ஆகிறான். தன்னை வென்ற ஒருவனுக்கு மண்ணோ, நிலமோ,தங்கமோ அல்லது வேறு ஏதாகினும் எல்லாம் ஒன்று தான். அவன் தன்னை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என உணர்ந்து, உயர்கடவுளின் மீது தன் எண்ணத்தை செலுத்துகிறான்.
""நமது வாழ்க்கை: நம் சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் பார்கிறோம், ஒருவர் மற்றவரிடம் பழகுவது அவர்களின் பதவி / சாதனை /அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துவிடுகிறது.நாம் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசும் போது, நாம் மிக பெரிய சாதனை செய்ததாகவும், அதே அலுவலக உதவியாளரிடம் பேசும்போது, அவருக்கு அறிவுரை செய்வதும் அவரை ஒரு முட்டாளை போல நடத்துவதும் வழக்கமாகிறது.  அவர்கள் இருவருமே இந்த உலகத்தில் கொடுக்கப்பட்ட தங்கள் கடமையை மட்டுமே செய்கினறனர். 1000 பேருக்கு வேலை தருகிற ஒரு தொழிலதிபராயினும்  அல்லது அவரது அலுவலக இடத்தை சுத்தம் செய்யும்  தொழிலாளி ஆயினும்இருவருமே சமமானவர்கள் தான்! இந்த உலகத்தில் எந்த உயிரினமும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ அல்ல, அனைவரும் சமமானவர்களே!  பதவி அதிகாரம் என்பது அந்த பதவியின் செயல் வெற்றிக்கு வழங்கப்பட்ட ஒரு உபகரணம் மட்டுமே! தனது முயற்சிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கும் ஒரு மனிதன், வாழ்க்கையில் தோல்வியாளனாயிருக்க வேண்டிய அவசியமில்லை, ஒருவேளை அவன் இணைப்புகள் இல்லாத வாழ்வும் எப்படி தோல்வியை கையாள்வது என அறிந்தும் இருக்கலாம். பெரும்பாலான வெற்றியாளர்கள், தோல்விகளை சந்தித்து அதிலிருந்து வெற்றி இலக்கை அடைந்தவர்களே, எனவே தான் அவர்களை நாம் பெரும் மனிதர்கள் என்கிறோம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு உயர் அதிகாரி முன்னால் உட்கார்ந்து பேசும் போது, நீங்கள் பயத்துடன் அல்லது பதட்டத்துடன் இருக்க வேண்டுமா? இல்லை...  நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, என்ன அறிந்துள்ளீர்களோ அது அந்த அமைப்பு / தொழிலகம் / சமுதாயத்தில் தேவைப்படுவதன் காரணமாகவே, நீங்கள் அங்கே வேலைக்கு அமர்த்தபட்டிருக்கிறீர்கள், அதனால் உங்கள் பங்கை நீங்கள் முதலில் ஒப்பு கொள்ள வேண்டும். ஒரு தனிநபராக, நீங்கள் உயர் கடவுளின் வழிமுறைகளுக்கு நெருக்கமாகவும், வாழ்க்கை மற்றும் வேலையை நன்றாக புரிந்தும் இருக்கலாம். அதனால் நாம் யாரிடமும் தாழ்ந்தோ அல்லது உயர்த்தியோ நம்மை பிரதிபலிக்கதேவையில்லை."
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் , எவ்வாறு உடல் மூலம் யோகா செய்து மனதை கட்டுபடுத்தி, கவனத்தை நிலை நிறுத்துவதெனவும், யார் ஒருவன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்கிறானோ அல்லது உறங்குகிறானோ அவனால் அதை பயிற்சி செய்ய இயலாது என்றும் கூறினார். எவன் ஒருவன் தன் சுயத்தை, சுய மனம் கொண்டு பார்த்து, தனில் திருப்தியடைகிறானோ, அவனை பெரும் துன்பங்கள்  சேர்வதில்லை. யோகா பயிற்சி செய்யும் ஒருவன் தன் சுயத்தில் கவனத்தை செலுத்தி சிறிது சிறிதாக உணர்வுகளையும், இணைப்புகளையும் விட்டு, தனக்கு நிலையற்றதன்மை தருபவற்றை நீக்க ஆரம்பிக்கிறான். அவன் என்னை எல்லா இடங்களிலும், எல்லா பொருட்களிலும் பார்க்கிறான். அவனுக்கு நான் என்றும் மறைவதில்லைஎவன் ஒருவன் ஒப்பீடு தன்னுடன் மட்டும் உள்ளதோ, அவன் என்னை எங்கும் பார்கிறானோ அவன் உயர்ந்த யோகி ஆகிறான். எல்லா யோகிகளிலும் தன் மனதினுள்ளே என்னை யார் பார்கின்றானோ, என்னோடு இணைகின்றானோ அவனே உயர்ந்த யோகி.
"நமது வாழ்க்கை: மூன்று வகையான மக்கள் நம்மிடையே உள்ளனர், முதலாவது, எப்போதும் உயிர்வாழ போராடும் மனிதர்கள், அவர்கள் வாழ்வில் அனைத்துமே குறுகிய காலத்தில் வாழ்வதற்காக அல்லது இன்பத்திற்காக மட்டும் அமைகிறது. இரண்டாவது, ஒப்பீட்டு மனிதர்கள், தனது வாழ்க்கையில் எப்போதும் இவர்கள் இயக்கப்படுவது சூழல், சமூகத்தால் மட்டுமே, அவர்கள் மற்றவர்களின் வாழ்வுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து குறிக்கோள்களை நிர்ணயிக்கின்றனர், அதை அடைய முயற்சிக்கின்றனர், மீண்டும் அவர்கள் ஒப்பிட தொடங்கி வாழ்கின்றனர். மூன்றாவது, முன் நிற்கும் மனிதர்கள், அவர்கள் வாழ்வில் எதையும் ஒப்பிடுவதில்லை, அவர்கள் தங்கள் உந்து சக்தியுடன் புதியவற்றை தொடங்குகின்றனர்.

ம்மில் பலர் இங்கே ஒரு ஒப்பீட்டு வாழ்க்கையை வாழ்கிறோம், நாம் நமது வாழ்க்கையை திரும்பி பார்க்க விரும்புவதில்லை. பயம் ... ஆம் நாம் பயப்படுகிறோம்!  உண்மையில் நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறோமா, நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம், மற்றும் பலவற்றை சிந்திக்கவும் அஞ்சுகிறோம்... ஏனென்றால்  நாம் இவற்றை சிந்திக்கும் நேரத்தில், நம்மை மற்றவர்கள்  கடந்து போய்விடுவார்கள் என கவலைகொள்கிறோம்... எனவே நம்மை நாமே உந்தி தள்ளி, போட்டியிட்டுகொண்டிருக்கிறோம் ... நாம் முன் நிற்கும் மனிதர்கள் என்று கூறியவர்கள் தொழிலதிபர்களோ அல்லது உயரதிகாரிகளோ அல்ல, அவர்கள் தங்கள் மனதிலோ, மூளையிலோ தங்களை மற்றவருடன் ஒப்பிடாமல், எந்த மாற்றத்திற்கும் தயாராக தன் சுயத்தின் மீதோ அல்லது கடவுளின் மீதோ முழு நம்பிக்கை கொண்டு, வாழ்வில் முன் நோக்கி செல்கின்றனர். சுய நம்மிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இவை இரண்டில், ஏதாவது ஒன்று அவசியம் அந்த உயர் கடவுளை அடைவதற்கு."

Sunday, August 18, 2013

அத்தியாயம் 5 - உண்மையான செயலாற்றா நிலை யோகா

அர்ஜுனன், செயலாற்றாமை மற்றும் செயல் யோகா இவற்றில் எதை பின்பற்றுவது என குழப்பமடைந்தான். கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், செயலின் மூலம் யோகா புரிதல் , செயலாற்றாமையை விட மேன்மையானது. எவன் ஒருவன் சமன்திறன் பராமரித்து எந்த வெறுப்பு அல்லது விருப்பு மற்றும் எதிர்ப்பத ஜோடிகளின் (நன்மை, தீமை போன்ற) ஆளுமை இன்றி, செயலுடனோ அல்லது முடிவுடனோ தன்னை இணைத்துகொள்ளாமல் செயல்புரிவானோ அவன் முக்தியடைகிறான். செயலாற்றாமை என்பது கடினமான ஒன்று, துறவிகளால் மட்டுமே செய்ய கூடியது. எவன் ஒருவன், யோகா நிலை (சமன்திறன்) கொண்டுள்ளானோ, எவன் மனம் தூய்மையானதோ, எவன் தன்னையே வென்று தன் உணர்வுகளை அடக்க வல்லவனோ, அவன் செயல்களால் களங்கம் அடையமாட்டான். அவன் அறிந்துள்ளான், அவன் செய்வதேதும் இல்லையென, கண்கள் திறத்தல், கேட்டல், தொடுதல், கைகளை பிடித்தல், தூங்குதல், சாப்பிடல், முகர்தல், கேட்டல், பார்த்தல் உள்ளிட்ட அனைத்தையும் அவன் கடவுளிடத்தினில் அர்பணிக்கிறான். அவன் தாமரை இலை தண்ணீருடன் இருப்பது போல் வாழ்கிறான். உடலாலும், மனதாலும் மற்றும் உணர்வுகளாலும் யோகிகள் (சமனிலையில் வாழும் ஒருவர்) இணைப்பு இல்லாமல் செயல்படுவதோடு, மன சுய சுத்திகரிப்புடன் வாழ்கின்றனர்.
"நமது வாழ்க்கை: நம் வாழ்க்கையில், நாம் சுவாசித்து நுரையீரலை நிரப்புகிறோம், நாம் இரத்தத்தை நாளங்களில் அனுப்புகிறோம், நாம் உணவை ஜீரணிக்கிறோம், நாம் நரம்பு அமைப்புகள் வேலை செய்ய கட்டளையிடுகிறோம், நம் அனுமதி இன்றி இவற்றில் ஏதுவும் வேலை செய்யாது! .... ஓ! மன்னிக்கவும், இவற்றில் எதுவும் நாம் செய்வதில்லை, நமது  சிந்தனைக்கும் அப்பாற்பட்ட சக்தி அவற்றை கவனிக்கிறது, ஆனால் நாம் நினைக்கிறோம் நாம் சாப்பிட்டால் மட்டும் இவை அனைத்தும் தானே உடலில் நடக்குமென்று! ... உண்மையென்னவென்றால், "உடல்" எனப் பெயரிடப்பட்ட ஒரு முழுமையான சிக்கலான அமைப்பை நாம் கொண்டுள்ளோம், ஆனால் அது என்றும் நமது கட்டுப்பாட்டில் இல்லை! (நாம் பாக்டீரியாவை கண்டுபிடித்து கொல்ல வெள்ளை அணுக்களை பணிக்கிறோமா என்ன?) இருப்பினும், உடல் மிக அதிக அறிவுடன் நமக்கு தெரியாமலேயே செயல்படுகிறது! ஆனாலும் அவ்வுடல் செய்யும் வேலைகளின் முடிவை மட்டும் நமதென்று கொண்டாடுகின்றோம்! உதாரணமாக, ஒரு நாள் நாம் விழித்தெழும் போது, நம் ைகள் வேலை செய்யவில்லை; நாம் கைகளை வேலை செய் என  கட்டளை இட முடியுமாமுடியாது.... எனவே நம் உடலில் நன்றாக வடிவமைக்கப்பட்ட நுண் அமைப்பு, இன்று மட்டும் அல்ல எதிர்காலத்திலும் நம்மால் அன்றி ஒரு உயர் சக்தியினால் கவனிக்கப்பட்டு, செயல்படும்போது, ஏன் அந்த உடலால் விளையும் செயலையும், முடிவையும் மட்டும் நமதென்று கொள்கிறோம். உங்களையும் என்னையும் காக்கின்ற அவனே செயலையும் செய்கிறான், எனவே எல்லா நன்மை,தீமையையும் அவனிடம் விட்டு கடமையை செய்யவேண்டும்.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஆசை பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சமனிலையில் வாழும் ஒருவன்,  துறவி,  பறவை, நாய், நாய் தின்னும் மனிதன் போன்ற யாராகினும் அவரை ஒரே  வழியில் பார்கிறான். அவன் அனைத்து சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை என்னிடத்தில் விட்டுவிடுகிறான். அவன் ஒவ்வொரு கணமும் அனைத்து உயிர்களுக்கும் முதல் மற்றும் முடிவு உண்டு என்பதையும்,  ணைப்புகள், உறவுகள் அவனுக்கு துன்பத்தை தரவல்லது என அறிந்து என்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து வாழ்கிறான்.

"நமது வாழ்க்கை: பலமுறை நாம் கடவுளை நம்மில் இருந்து வேறுபடுத்தி, நாம் தான் எல்லா செயல்களையும் செய்வதாக நம்புகிறோம். நாம் கடவுளை வீட்டின் அல்லது அறையின் ஒரு மூலையில், ஒரு மாடத்தில் வைக்கிறோம், அதேபோல் கோவில் / தேவாலயம் / மசூதியில் கடவுளை வைத்து அவர் அங்கே மட்டும் தான் உள்ளார் என்று நம்புகிறோம். நம் கடவுளின் முன், நாம் புனிதம் இல்லாத எதையும் செய்யகூடாது என்று நம்புகிறோம். முதலில், நாம் வடிவமைப்பு மூலம், கடவுளை நம்மிடமிருந்து பிரிக்கிறோம். இரண்டாவது, நாமே எல்லா செயல்களையும் செய்யவதாகவும்  கடவுள் ஒரு விருந்தாளி என எண்ணுகிறோம், மற்றும் கடவுள் புனிதமான செயல்களில் மட்டுமே உள்ளார், மற்ற எதிலும் இல்லை என எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ, நம்முடைய எல்லா செயல்களையும் அவரிடம் ஒப்படைக்கவேண்டும், அவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உயிரிலும் எப்போதும் உள்ளார் என கூறுகிறார். ஆனாலும் அவரின் பேச்சை நாம் கேட்பதில்லை. சில நேரங்களில் ஏதோ கடவுள் கால் சென்டர்/தொலைபேசி சேவை நடத்துவது போல, எப்போதெல்லாம் அவரின் தேவை உண்டோ அப்போதெல்லாம் ஒரு விண்ணப்பத்தை செய்து, அவர் சேவையை பூர்த்தி செய்ய காத்திருக்கவேண்டியது. அது நடக்காவிடில் அவரிடம் சென்று ஒரு புகார் மனுவை தர வேண்டியது. கவலைப்படாதீர்கள், நம்மில் பலர் வாரந்திர, மாதந்திர அல்லது வருடாந்திர சந்தா செலுத்துவதாகவும் நம்புகின்றனர்!